"டிவி பார்ப்பேன், டான்ஸ் ஆடுவேன், பேசுவேன்" - அசத்தும் கிளியின் பேச்சு! - parrot dance for kannadam songs
பெங்களூரு: குடகு மாவட்டத்திற்கு அருகில் சோமவாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்து வரும் ராமு கிளி, மனிதர்களின் சுபாவங்களைக் கொண்டுள்ளது. உரிமையாளருடன் உட்கார்ந்து டிவி பார்ப்பது, கன்னட பாடல்களுக்கு நடனம் ஆடுவது, செல்ஃபோனில் அழைப்பு வந்தால் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்க சப்தமிடுவது, சாப்பிட்டாயா என உரிமையாளரிடம் கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, அந்த குடும்பத்தின் மகனாகவே மாறி, பாச மழையில் நனைந்து வருகிறது.