துணிகளின் நகரம் பானிபட்!
பானிபட்.. டெல்லியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் பல வரலாற்று போர்களின் சாட்சியாக இன்றளவும் திகழ்கிறது. இங்கு பாபர், ஹூமாயூன், இப்ராஹிம் லோடி உள்ளிட்டோர் நடத்திய யுத்தங்கள் இந்தியாவின் வரலாற்றை மாற்றின. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், பானிபட் வரலாற்று சின்னங்களை கலந்தர் ஷா தாங்கி நிற்கிறது. ஆனால் இன்று பானிபட் தனது அடையாளத்தை மாற்றிகொண்டது. இன்று பானிபட், ஜவுளித்துறையில் நாட்டின் மையமாக மாறிவிட்டது. பானிபட் மாவட்டத்தில் இருந்து மட்டும் உலகளவில் 7.5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கைத்தறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.