டேங்கரில் இருந்து கசிந்த ஆக்ஸிஜன் - பொதுமக்கள் அதிர்ச்சி! - டேங்கரில் இருந்த கசிந்த ஆக்ஸிஜன்
ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் டேங்கர் ஒன்றில் இருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கசிந்ததை அடுத்து, ரயில்வே துறை விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள மர்வார் சந்திப்பு வழியாக ரயில் சென்றபோது, அங்கிருக்கும் மக்கள் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டதை கவனித்தனர். இந்த சரக்கு ரயில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்துக்குச் சென்றது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது.