டெல்லி ரோஹிங்கியா முகாமில் தீ விபத்து - டெல்லி மாநில செய்திகள்
டெல்லி மாநிலம் கலிண்டி குஞ்ச் மெட்ரோ நிலையம் பகுதியில் சுமார் 270 ரோஹிங்கியா அகதிகள், 50 குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நேற்று(ஜுன்.12) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் அதிகாலை 3 மணியளவில் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தால் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.