வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்றிய பொதுமக்கள்! - மாண்வர்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் பொதுமக்கள்
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று தங்கர்பூர் நகரில் பள்ளி முடிந்து மாணவர்கள் 12 பேர் லாரியில் வீடுகளுக்கு திரும்பி சென்றபோது, ஆற்று வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தரைப்பாலத்திலிருந்து அடித்து செல்லப்பட்ட லாரி வெள்ளத்தில் மூழ்கியது. நல்வாய்ப்பாக, இதனை கண்ட பொதுமக்கள் 12 மாணவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.