ஹார்ன் அடித்தால் ரெட் சிக்னல் மாறாது - ஒலி மாசை குறைக்க அட்டகாசமான ஐடியா - Mumbai traffic police
மும்பை: நம்மில் பெரும்பாலனவர்களுக்கு சிக்னலில் நிற்பதைவிட, அங்கு எழுப்பப்படும் ஹார்ன் ஒலிதான் கடுப்பை ஏற்படுத்தியிருக்கும். சிக்னலில் சிவப்பு ஒளி இருக்கும்போதே, ஹார்ன் அடிக்க தொடங்கிவிடுவர் நம் நாட்டின் 'பொறுமைசாலி' வாகன ஓட்டிகள். அவர்களின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களை நீக்க, மும்பை போக்குவரத்து காவல் துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சிக்னலில் நிற்கும்போது, ஹார்ன் ஒலி அளவு 85ஐ தாண்டினால், சிவப்பு விளக்கு 90 நொடிகள் நீடிக்கப்படும். மும்பை காவல் துறையின் இந்த அட்டமாசமான ஐடியாவுக்கு 'காது மேல் பலன்' கிடைத்துள்ளது.