மும்பையில் பேருந்து விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் - பேருந்து விபத்து சிசிடிவி காட்சி
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை தாதர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கீழே இருக்கும் அணுகு சாலையில் (service road) குப்பை லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என மொத்தம் எட்டு பேர் படுகாயமடைந்தனர். இதில் ஐந்து பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.