வைரல் வீடியோ : தாய் குரங்கின் பாசப்போராட்டம்! - வைரல் வீடியோ
உத்தரகண்ட் மாநிலம் கோபேஷ்வர் என்ற பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் குட்டி குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இதனை கண்ட தாய் குரங்கு மின்சாரம் நிறுத்தப்பட்ட பிறகு மின்கம்பியில் சிக்கியுள்ள குட்டி குரங்கை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றது. குட்டி குரங்கை மீட்க தாய் குரங்கு நடத்திய இந்தப் பாசப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.