குலு-மணாலியில் புது வெள்ளை மழை பொழிகின்றது! - ஹனுமான் திப்பா மலைப்பகுதி உறைபனியால் சூழப்பட்டுள்ளது
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அழகிய சுற்றுலா ஸ்தலமான சிம்லா, மணாலி பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் குலு-மணாலியில் உள்ள ஹனுமான் திப்பா மலைப்பகுதி உறைபனியால் சூழப்பட்டுள்ளது. இவை பார்ப்பதற்கு மலைமேல் வெள்ளை போர்வையைப் போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதுபோன்ற பல இடங்கள், உறைபனியால் சூழப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அங்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.