சிங்கத்தின் கூண்டுக்குள் சிக்கிய பார்வையாளர்: திக்... திக்... காணொலி! - அலிப்பூர் உயிரியில் பூங்கா
மேற்குவங்கம் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் வெளியே வராதவாறு பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்தது. ஆனால், அதனை மீறி கூண்டுக்குள் சென்ற ஒருவரை சிங்கம் கடுமையாகத் தாக்கியுள்ளது. அடையாளம் தெரியாத அவருக்கு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.