வீடியோ: ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணி - தாதர் ரயில் நிலைய விபத்து
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தாதர் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமையன்று இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். அப்போது பணியில் இருந்த ஊர்க்காவல் படையினர் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.