மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த நபர் - தக்க சமயத்தில் உதவிய CISF பணியாளர் - ஷாஹ்தரா மெட்ரோ ரயில் நிலையம்
ஷைலேந்திர மேத்தா என்ற பயணி டெல்லியில் உள்ள ஷாஹ்தரா மெட்ரோ ரயில் நிலையத்தில் செல்போன் பார்த்துகொண்டே நடந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பயணி மெட்ரோ தண்டவாளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். இதில் காலில் அடிப்பட்டதால் எழுந்து நிற்கமுடியாமல் தண்டவாளத்தில் தவித்து வந்துள்ளார். அப்போது தக்க சமயத்தில் வந்த CISF பணியாளர் உடனடியாக தண்டவாளத்தில் ரயில் வருவதற்குள் அந்த நபரை மீட்டார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.