சுவையான சேப்பக்கிழங்கு மசாலா சாட் - செஞ்சி பாருங்க வித்தியாசமா உணர்வீங்க! - சேப்பக்கிழங்கு உணவுகள்
உணவைப் பற்றிப் பேசும்போது நம் நினைவுக்குவருவது சாலையோர உணவுகளாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கரோனா ஊரடங்கு காரணமாக அந்தக் கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவை ருசிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பு மூலம் அந்தவகை உணவுகளை மிகக் குறைந்த நேரத்தில் இனி வீட்டிலேயே செய்ய முடியும். வட இந்திய உணவில் பிரபலமான "கச்சாலு சாட்" என்ற சேப்பக்கிழங்கு மசாலா சாட் செய்வது எப்படி செய்வது என்று பார்த்து, நீங்களும் செய்து பாருங்கள். மாலை நேரத்தில் உங்கள் பசியாற்ற இது ஒரு சிறந்த உணவாகும்.