மகள் திருமணத்துக்காகப் பூசாரி அவதாரம் எடுத்த தந்தை! - daughter's wedding
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் தன் மகளின் திருமணத்தை நடத்தி வைக்க, தந்தை ஒருவர் தானே பூசாரியாக மாறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக, பூசாரிகள் யாரும் திருமணத்தை நடத்தி வைக்க முன் வராததால் மல்லையா சுவாமி என்பவர் தன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.