வெள்ளப்பெருக்கில் சிக்கியவரைப் போராடி காப்பாற்றிய மக்கள்! - இடுக்கி
பத்தனம்திட்டா: கேரளாவில் பெய்துவரும் கனமழையால் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பத்தனம்திட்டா மணிமலை ஆறு காட்டாறுபோல் ஓடுகிறது. அந்த வெள்ளப்பெருக்கில் இருவர் சிக்கியுள்ளனர். ஒருவரை பத்திரமாக மீட்ட நிலையில், மற்றொருவரை ஆற்றுப்பாலத்தில் இருந்து கயிறு மூலம் பொதுமக்கள் மீட்டுள்ளனர். அப்போது அப்பகுதியினர் எடுத்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது.