சீறிப்பாய்ந்த சிறுத்தை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வர்! - சீறி பாய்ந்த சிறுத்தை
உத்தரப் பிரதேசம்: மகராஜ்கஞ்ச் ஷியாம்தேர்வா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று சிந்திரம் கிராமத்தில் நுழைந்து வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியுள்ளது. இதையடுத்து கிராமத்தினர் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டோடு நின்றுகொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத நிலையில் பதுங்கியிருந்த சிறுத்தை சீறிப்பாய்ந்து வனத் துறையினர் உள்பட நான்கு பேரைத் தாக்கியது. தற்போது நான்கு பேரும் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.