ஊரடங்கில் வெளியே சுற்றிய கலெக்டரை கேள்வி கேட்ட பெண் போலீஸ்.! - District Collector of Bhilwara Shivprasad M Nakate
ராஜஸ்தான் : பில்வாரா மாவட்டத்தில், கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சிவ்பிரசாத் எம். நகதே. பில்வாராவில் கரோனா ஊரடங்குகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை காண்பதற்காக தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு சைக்கிள் மூலம் நகரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வழியில் ஒரு பெண் காவலரால் தடுத்து நிறுத்தப்பட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்? என விசாரிக்கப்பட்ட பின்னர் தான் ஆட்சியர் என்று அறிமுகம் செய்துகொண்டு, கடமையை தவறாது செய்து கொண்டிருந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர், பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள காவல் துறையினரையும் சந்தித்து பேசினார்.