ஒடிசாவில் களைகட்டிய கோனார்க் நடன திருவிழா - கோனார்க் சூரியனார் கோயில்
ஒடிசா மாநிலம் கோனார்க்கில் பிரபலமான சூரியனார் கோயிலில் 31ஆவது நடன திருவிழா நேற்று நிறைவுபெற்றது. அம்மாநில சுற்றுலாத்துறை தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் இந்த விழா கோலாகலமாக நடத்தப்படும். இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நடனக் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலைஞர்களின் பரத நாட்டியம், குச்சிப்புடி, கதக் நடனம் காண்போர் கண்களை கவர்ந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பங்களையும் பொதுமக்கள் வெகுவான ரசித்தனர்.