பழங்கால ஹரியானா தாஜ்மஹால்! - ஹரியானா
பாமரனின் கண்களுக்கு அகப்படாமல், வரலாற்றின் புத்தகங்களில் பல வரலாற்று நிகழ்வுகள் ஒளிந்துள்ளன. இதேபோல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் ஹரியானாவில் பழம்பெரும் நகரான குருஷேத்ராவின் தனேசர் நகரில் புதைந்துள்ளது. அங்கு பற்பல இரகசியங்களை தாங்கி நிற்கும் ஷேக் சில்லியின் கல்லறைக்கு நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல போகிறோம். ஹரியானா தாஜ்மஹால் என்றழைக்கப்படும் இக்கோட்டை, ஆக்ரா தாஜ்மஹால் கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும்!