கேரளாவில் மீண்டும் படகு இல்லம் திறப்பு - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கேரளாவில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் படகு இல்லம் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கோட்டயம் அடுத்துள்ள குமரக்கோம் பகுதியில் உள்ள பாரம்பரிய படகு இல்லத்தை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையின்போது அனுமதி அளிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனாலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத்திற்கான முன்பதிவு குறைந்துள்ளது எனப் படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் தற்போது அங்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.