உதம்பூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! - ஜம்மு-காஷ்மீர் செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: உதாம்பூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று (மே.27) இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதால், தீயணைப்புத் துறையினர், இந்திய விமானப்படையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.