இந்தியாவின் பழமையான ஆலமரம்! - சோட்லி கேதி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பதேஹர் சாஹிப், உலகின் மிகப் பழமையான ஆலமரம் என்று கருதப்படுகிறது. ஒருவர் சோட்லி கேதி (Chotli Khedi) பகுதியை அடைந்தால், அவரை மிகப்பெரிய மரம் ஒன்று வரவேற்கும். இம்மரம் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. பரந்து விரிந்து பெரும் குடை போல் காட்சியளிக்கும் இம்மரம் ஆறு முதல் ஏழு ஏக்கர் வரை பரந்துள்ளது. இதன் வயது 300 ஆண்டுகள் என்று கூறும் கிராம மக்கள், இதனை காயகல்ப விருட்சம் என்றும் பரோடி சாஹிப் என்றும் கூறுகின்றனர். இந்தியாவின் பழமையான ஆலமரம் குறித்து பார்க்கலாம்.