ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் சந்திக்கும் பாகுபாடு - மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு...! - மாநிலங்களவையில் உரைத்த திருச்சி சிவா
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திருச்சி சிவா, “கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதில், சில மாணவர்களிடம் அதற்கான தொழில்நுட்ப பொருள்கள் இல்லாததாலும், நெட் வசதி இல்லாததாலும் மாணவர்கள் சரியான கல்வியை பெற முடிவதில்லை. அதனால், கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாகுபாட்டை மத்திய அரசு போக்க வேண்டும் என வலியுறுத்தினார்.