மாலை நேர ஸ்நாக்ஸ்: சுவையான அரிசி மாவு முறுக்கு செய்வது எப்படி? - லாக்டவுன் ரெசிபி தொகுப்பு
முறுக்கு என்ற உடனே மொறுமொறுப்புடன் இருக்கும் அதன் தன்மையும் சுவையும் அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடும். ஏனென்றால் முறுக்கு என்பது மக்களின் அன்றாட நொறுக்குத் தீனி என்பதை யாராலும் மறுக்க இயலாது. தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற உணவுகளில் முறுக்கும் ஒன்று. மாலை நேரங்களிலோ அல்லது மழை வரும் காலங்களிலோ முறுக்கு செய்து, அதனுடன் சூடான டீயோடு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வட மாநிலங்களில் இதனை சக்லி என்று அழைப்பார்கள். இன்று எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் "அரிசி மாவு முறுக்கு" சுவையாகச் செய்வது எப்படி என்று பார்த்துப் பயன்பெறுங்கள்.