கனமழையால் சரிந்த வீடு: வைரல் காணொலி - House collapses in slum area due to heavy rainfall in Delhi
டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அண்ணா நகர் குடிசைப் பகுதியில் உள்ள வீடு ஒன்று சரிந்து விழுந்தது. வீடு சரிந்து விழும் வேளையில் வீட்டில் யாரும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்பு இயந்திரங்கள் நிகழ்விடத்துக்குச் சென்று சேர்ந்தன. வீடு சரிந்து விழும் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.