புகைப்பிடித்தலுக்கு 'நோ' சொல்லும் ஹிமாச்சல் கிராமம் - விசிலடிக்கத் தடை
இயற்கை அழகிற்கு பெயர் போன ஹிமாச்சலின் கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராரங் எனும் மலைக்கிராமம். இங்கு பல முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட எவரும் புகைபிடிக்கக் கூடாதென விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இங்கு தீ விபத்து ஏற்பட்டால் மட்டுமே விசிலடிக்க வேண்டும். மீறி தேவையில்லாமல் விசிலடித்தால் பஞ்சாயத்தார் கூடி அபராதம் விதிக்கின்றனர். எது எப்படியோ இன்றைய இளைஞர்கள் பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்வை தொலைக்கும் நிலையில், ராரங் கிராமத்தினரின் இந்தக் கட்டுப்பாடு பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.