குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த புள்ளி மான்கள் கூட்டம்! - Herd of spotted deer entering the residential area
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள என்.டி.ஏ காடு பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாகும். இந்த காட்டுக்கு அருகில் சிவ்னேயில் உள்ள ஆஷிர்வாட் சொசைட்டி உள்ளது. இப்பகுதியில் குடியிருப்புகளுக்கும், காடுகளுக்கும் இடையிலான சுவர் இடிந்துள்ளதால் இன்று(டிச.29) புள்ளி மான்கள் நேரடியாக குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கு உணவளித்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தற்போது அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.