சங்கராந்தியை முன்னிட்டு முயலுக்கு காதணி விழா- காணொலி! - கிராமத்தை சுற்றி ஊர்வலம்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள காஞ்சிபுர கிராமத்தில், சங்கராந்தியைக் கொண்டாடும் விதமாக, முயலை வேட்டையாடி அதற்கு காது குத்தும் விநோதத் திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் முயலுக்கு தங்கத்தில் காதணிகளை அணிவித்து பிறகு கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்து அக்கிராமத்திலுள்ள வரதராஜசாமி கோயிலில் வைத்து தரிசனம் செய்துள்ளனர்.