வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு அலுவலக கட்டடங்கள் - வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு அலுவலக கட்டடங்கள்
வண்ண விளக்குகளின் முப்பரிமாண உயிரோவியமாய் மாறிப்போயிருந்தது அரசு கட்டடம். அதில் நீர்வாழ் உயிரியில் தொடங்கி நிலவாழ் பேருயிரி யானை வரையிலான பரிணாம வளச்சியை விளக்கும் விளக்குகளின் வித்தை. அதைத் தொடர்ந்து ஏரோட்டும் விவசாயி, அவரைப் பின் தொடரும் டிராக்டர் என வளர்ச்சியின் பரிணாமங்களை வியக்கும் போதே மூவர்ண பின்னணியல் தேசபிதா ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார். விளக்குகளின் வித்தை விழியில் நீர் பனிக்க தொடங்கச் செய்கையில், மீண்டும் வண்ணங்களாக சுழன்று நம் எண்ணத்தில் மகிழ்ச்சி விதைக்கிறது வண்ண வண்ண விளக்குகள். நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளூர் வாசிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தன.