காதலுக்கு நோ! மின்சார கோபுரத்தில் ஏறிய காதலனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் - காதலன் தற்கொலை முயற்சி
ராஞ்சி: காதல் தோல்வி விரக்தியில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் 25 வயதான இளைஞர் ஒருவர், ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நபரைக் கீழே இறக்குவதற்கு, அவரின் காதலியைக் காவல் துறையினர் அழைத்து வந்தனர். ஆனால், அந்த மின் கோபுரத்தில் மின்சாரம் சப்ளை கிடையாது என்பது இறுதியாகத்தான் தெரியவந்துள்ளது. ஓய்யாரமாக போஸ் கொடுத்து நின்ற நபர், காவல் துறையின் உதவியோடு கீழே இறங்கினார்.