ஹெல்மெட் அணிந்து கர்பா நடனமாடி அசத்திய கலைஞர்கள் - ஹெல்மெட் விழிப்புணர்வு
நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து, குஜராத் மாநிலத்தில் கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூரத்தில் உள்ள 'கர்பா வகுப்புகளில்' இருந்து வந்திருந்த ஒரு நடனக் குழு, ஹெல்மெட் அணிந்த கர்பா நடனமாடினர். இதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; 'அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஹெல்மெட் அணிந்து நடனமாடினோம். ஹெல்மெட் என்பது நம் சொந்த பாதுகாப்புக்காக அணிவது என்றனர்.