காந்தி 150: மகாத்மாவிடம் வழங்கப்பட்ட தேசியக்கொடி! - விஜயவாடாவில் காந்தி
காந்தியடிகளுக்கும் தெலுங்கு மண்ணிற்கும் உள்ள பந்தம் மிக நெருக்கமான ஒன்று. ஆந்திராவின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் விஜயவாடாவிற்கு காந்தியடிகள் ஆறு முறை வருகை தந்துள்ளார். இங்குள்ள சிற்பங்கள், பிங்கலி வெங்கய்யா தேசத்தின் மூவர்ணக் கொடியைக் காந்தியடிகளிடம் வழங்கியதை நினைவுபடுத்தும்விதமாக அமைந்துள்ளது.