பரிமள ரங்கநாதர் கோயிலில் கொடியேற்றம்! - கோயில் கொடியேற்றம்
மயிலாடுதுறை, பரிமள ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் பங்குனி உத்திர பெருந்திருவிழா நேற்று (மார்ச்.20) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நான்கு வீதிகளில் கொடி சீலை புறப்பாடும், ஆலய பிரகாரத்தில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது. இக்கொடியேற்றத்தின்போது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.