செகந்திராபாத் கிளப்பில் பயங்கர தீ விபத்து: ரூ.20 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம் - செகந்திராபாத் கிளப் கட்டப்பட்ட ஆண்டு
ஹைதராபாத்: இந்தியாவின் பழமையான கிளப்களில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று (ஜன.16) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 1878 ஆம் ஆண்டு 20 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த கிளப்பிற்கு 2017ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து அஞ்சல் அட்டை வெளியிட்டது. இந்தக் கிளப்பில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் சங்கராந்தி விழாவையொட்டி விடுமுறை விடப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.