காகித ஆலையில் தீ விபத்து... லட்சக்கணக்கில் பொருள்கள் நாசம்! - உத்தரப்பிரதேசம் காகித ஆலை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள ஸ்டார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கில் பொருள்கள் நாசமாகியுள்ளது எனக் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக, எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க பல நேரமாக போராடி வருகின்றனர்.