புனே அருகே குடோனில் பற்றி எரிந்த தீ! - திகுதிகுவென குடோனில் பற்றி எரிந்த தீ
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பிபிவேவாடியில் அமைந்துள்ள குடோனில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. நல்வாய்ப்பாக, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.