உத்தரகாண்டில் பெருவெள்ளம்: நடு ஆற்றில் சிக்கிய யானை - உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கௌலா ஆற்றின் நடுவே யானை ஒன்று சிக்கியுள்ளது. அங்கு வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளதால், யானையை மீட்கும் பணி சற்று தாமதமாகியுள்ளது. இருப்பினும், யானையை மீட்கும் பணியில் வனத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.