மதுபோதையில் மாடல் அழகி: சாலையின் நடுவே தகராறு - மதுபோதை மாடல் அழகி
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மாடல் அழகி ஒருவர் மதுபோதையில் சாலையின் நடுவே தகராறில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த ராணுவ வாகனத்தை காலால் எட்டி உதைத்தும், தடுக்கவந்த ராணுவ வீரருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு அலப்பறை செய்தார். இது குறித்த காணொலி பகிரப்பட்டு, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.