தீபாவளிக்கு ஒளியேற்றும் பசுஞ்சாண விளக்குகள்! - தீபாவளி
இந்தாண்டு தீபாவளி நாடு முழுக்க களை கட்டத் தொடங்கியுள்ளது. அவ்வாறு தீபாவளியை சிறப்பானதாக்க இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மார் நகரப் பெண்களும் தயாராகிவிட்டனர். பொதுவாக தீபாவளிக்கு மண் விளக்குகளை நீங்கள் பார்த்திருக்கலாம். தகதகவென ஜொலிக்கும் சீன விளக்குகளையும் கண்டிருக்கலாம். ஆனால், இத்தீபாவளிக்கு பசுஞ்சாண விளக்குகளை காணப் போகிறீர்கள். இவ்விளக்குகளை உருவாக்கும் பெண்கள் தன்னம்பிக்கை கொள்ளும் வகையில் விலங்குகள் பராமரிப்புத்துறையும் இதற்கு கைகொடுக்கின்றன.