ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம் - ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்
நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே தமிழ்நாடு மீளாத நிலையில், இப்போது அடுத்த சவாலை எதிர்கொள்ள மாநிலம் தயாராகிவருகிறது. ஒரு தேர்வுக்கே பல இன்னல்களை சந்தித்த மாணவர்கள், தற்போது கரோனா சூழல் காரணமாக மூன்று தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஐே.இ.இ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். முதன்மை தேர்வுக்கு பிறகு அட்வான்ல் பிரிவில் இரண்டு தேர்வுகளை எழுதியாக வேண்டும். மாணவர்களின் இன்னல்களை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற விவாதத்தில் கல்வியாளர் பாலாஜி சம்பத், மாணவர் அமைப்பின் தலைவர் சுபாஷ், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
TAGGED:
ஈடிவி பாரத்