கரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணியின் சடலம் மயானத்தில் பல மணி நேரம் கிடந்த அவலம்! - கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பல மணி நேரம் மயானபூமியில் போட்டுவைக்கப்பட்டது
மத்தியப் பிரதேச மாநிலத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஏழு மாதம் கர்பிணியின் சடலத்தை, உறவினர்கள் யாரு இறுதி சடங்குகளை செய்ய முன் வராததால், மயான பூமியில் பல மணி நேரம் போட்டு வைத்தனர். இறுதியாக, அந்தப் பெண்ணின் அண்ணி தகனம் செய்தார். இதுதொடர்பாக தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார், இதுகுறித்து விசாரனை மேற்கொண்டுவருகிறார். கர்ப்பிணியின் உடல் பல மணிநேரம் தகனம் செய்யாமல் கிடந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.