கரோனா நோயாளிகளுடன் கவச உடையில் மருத்துவர்கள் நடனம்! - மருத்துவர்கள் நடனம் வைரல் வீடியோ
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த, அவர்களுடன் இணைந்து கவச உடையில் மருத்துவர்கள் நடனமாடுகின்றனர். இதுமட்டுமின்றி உடற்பயிற்சி செய்ய அனுமதிப்பது, காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் யோகா கற்றுக்கொடுப்பது போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.