தேசத்தின் குரலை உயர்த்த ஆரம்பத்திலிருந்தே உறுதி - ராகுல்காந்தி ட்வீட் - காங்கிரஸ் கட்சி உதயம்
டிசம்பர் 28ஆம் தேதியான இன்று அகில இந்திய காங்கிரஸ் (ஐஎன்சி) நிறுவப்பட்டு 135 ஆண்டுகள் நிறைவடைந்து 136ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இன்றைய தினம் திரங்க யாத்திரை மூலம் பரப்புரையைத் தொடங்கவும் உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்த்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “தேசத்தின் குரலை உயர்த்த காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே உறுதியளித்துள்ளது. இன்று, காங்கிரசின் தொடக்க நாளில், உண்மை, சமத்துவம் குறித்த எங்கள் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.