தடுப்பூசி சோதனையில் 26,000 தன்னார்வலர்கள் - பாரத் பயோடெக் - கோவாக்சின்
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது மாத கடின உழைப்புக்குப் பிறகு கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுச்சித்திரா எல்லா தெரிவித்துள்ளார். தடுப்பூசி சோதனையில் 26,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி பெறும் வகையில் அதுகுறித்த அனைத்து தரவுகளையும் வல்லுநர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நிறுவனங்கள்கூட எங்களிடம் போட்டி போட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.