இங்குதான் ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்திஜி அடிக்கல் நாட்டினாரா? - ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்திஜி அடிக்கல் நாட்டிய இஅடம்
மகாத்மா காந்தியின் போதனைகள் இன்றளவும் மக்கள் மத்தியில் மகத்துவத்துடன்தான் உயிர்ப்போடு இருக்கின்றன. சுதந்திர போராட்டத்தின்போது அவர், சென்ற இடங்கள் இன்று தேசிய பாரம்பரிய சின்னமாக போற்றப்படுகின்றன. அப்படியான வரலாற்றை திரும்பி பார்க்கும்போது, மத்தியப் பிரதேசத்தில் காந்திஜி பத்து முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் ஆறாவது முறையாக ஜனவரி 1921ஆம் ஆண்டு ஷிந்த்வாராவிற்கு சென்றார். அப்போதுதான் அவர் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அடித்தளமிட்டுள்ளார்.