உணவுக்கூடம் அமைத்து மக்களின் பசிபோக்கும் சத்தீஸ்கர் காவல் துறை! - police feed food to needy people
கரோனா காலக்கட்டத்தில் காவல்துறையினர் பொது மக்களுக்கு பலவிதங்களில் உதவிவருகின்றனர். பெருந்தொற்று காலத்தில் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் இரவு பகலாக காவல் காத்து மக்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை, அவர்கள் வழங்கிவருகின்றனர். அதுமட்டுமல்ல, பல இடங்களின் உணவின்றி தவித்துவரும் மக்களின் பசி போக்கும் உன்னத சேவையை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றில் காவல்துறையினர் உணவுகளை தயாரித்து வழங்கிவருகின்றனர்.