விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2 - சிறப்புத் தொகுப்பு - sriharikota
ஸ்ரீஹரிகோட்டா: சுமார் 400 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்ட இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம், சரியாக பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு 15 நிமிடங்கள் கழித்து மூன்று மணியளவில் சந்திரயான் விண்கலம் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைவிட்டு தனியே பிரிந்தது நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்தக் காட்சிகளைப் பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாகக் கண்டுகளித்தார்.