பழைய வாகனங்களுக்கு பசுமை வரி... யாரெல்லாம் எவ்வளவு தொகை கட்ட வேண்டியிருக்கும்?
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்தான முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, இந்தத் திட்டமுன்வடிவு மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பசுமை வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் 8 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் போக்குவரத்து தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும்போது, சாலை வரியோடு சேர்த்து பசுமை வரியும் செலுத்த வேண்டிருக்கும். இதுகுறித்து முழுமையாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு...