நூலிழையில் உயிர் தப்பிய மகன்: வைரல் வீடியோ! - கேரளா
கேரளாவில் தென்மேற்கு பருவமழை, தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகமாக வயநாடு, மல்லப்புரம் மாவட்டங்களில் அதிக அளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மல்லப்புரம் கொட்டக்குன்னு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் வீடுடன் சிக்கியுள்ளனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு நடந்த இந்த சம்பவம்த்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதில் மகன் மட்டும் நூலிழையில் உயிர் தப்பிய விடியோ வெளியாகியுள்ளது. இதில் சிக்கிய அம்மா, மனைவி, குழந்தை மூவரையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.