கார் மீது நேருக்கு நேர் மோதி இழுத்து செல்லும் லாரி: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் - ஆக்ரா விபத்தில் மூவர் உயிரிழப்பு
லக்னோ: ஆக்ராவில் அதிவேகமாக வந்த லாரி எதிரே வந்த கார் மீது மோதும் பயங்கரமான விபத்தின், நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.